இலங்கை

மாணவர்களை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம் !

– யாழ்.செய்தியாளர் –

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியமூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது .

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான்நீ திமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.