உலகம்

மாணவர்களுக்கு உதவும் கோடீஸ்வரர் !

 

ஹொங்காங்கின் செல்வந்தரான லீக்கா சிங், பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு கட்டணங்களை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு செலுத்த முன்வந்துள்ளார்.

சீனாவின் சாண்டோ பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் படிப்பை ஆரம்பிக்கும் மாணவர்களுடைய கட்டணங்களை அவர் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

90 வயதான லீ காசி தமது பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

போர்ப்சின் தகவல்படி அவரது சொத்து மதிப்பு 30.4 பில்லியன் டொலர்களாகும்.

ஏற்கனவே அவர் அமெரிக்க மாணவர்கள் சிலருக்கான கட்டணத்தையும் செலுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது