இலங்கை

மாகாண தேர்தலுக்கு வழிவகைகளை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை – தேர்தல் ஆணைக்குழு தலைவர் தகவல் !

 

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையின் உறுப்பினர்களை இன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 33 ஆவது விதந்துரைக்கு அமைவாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய ,
அதனை செய்யுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை விடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.