இலங்கை

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்

மாகாணசபைத் தேர்தலை சிறு திருத்தங்களுடன் பழைய முறைப்படி நடத்த பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது பற்றி இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது பழைய முறையில் தேர்தலை நடத்தலாமென பலரும் கூறினர்.எப்படியாயினும் சிறு திருத்தங்களை செய்து எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கலாமென பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் பழைய அடிப்படையில் மாகாண தேர்தலை நடத்துவதற்கும் அதற்கு முன்னர் அதிலுள்ள சில குறைபாடுகளை நிவர்த்திக்கவும் இன்று பேசப்பட்டுள்ளது.

பழைய தேர்தல் முறையில் நடத்த எப்படியான திருத்தங்களை செய்வது என்பது குறித்து அமைச்சர்களான மனோ கணேசனும் ,ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவார்களென்று குறிப்பிட்ட பிரதமர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிப்படையாமல் இருக்க சில திருத்தங்களை செய்ய வேண்டுமென மேற்படி இரு அமைச்சர்மாரும் வலியுறுத்துவதாக இந்த கூட்டத்தில் குறிப்பிட்டார் .