இலங்கை

மாகாணங்களின் சுகாதார பணிப்பாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடையே சந்திப்பு

சகல மாகாணங்களின் சுகாதார பணிப்பாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (23) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது

இன்று (23) மாலை இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இதர அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களை தொற்றுநீக்கும் முறைமை தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது.