உஷ்... இது இரகசியம் !

மஹிந்த வீட்டுக்கு சென்ற மைத்ரி

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு சென்றார்.

மஹிந்த மற்றும் மைத்திரிக்கு நெருக்கமான கம்பஹா உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரனுக்கு திருமணம். முன்னதாக ஒரு பெரிய ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருமணப் பதிவை பதிவை தனது வீட்டில் வைத்து செய்யலாமென மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். மற்றுமொரு சாட்சியாளராக கையொப்பமிட மைத்ரி விருப்பம் தெரிவித்ததையடுத்து நேற்று பதிவுத் திருமணம் மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நடந்தது.

அதில் கலந்துகொள்ளவே வந்த மைத்ரி – பின்னர் மஹிந்தவுடன் பலதும் பத்தும் பேசினார். தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து இங்கு பேசப்பட்டதாக தகவல் .