இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவிடம் சிவ்சங்கர் மேனன் சொன்ன ரகசியம் !

மஹிந்த ராஜபக்ஷவிடம் சிவ்சங்கர் மேனன் சொன்ன ரகசியம் !

பாத்பைண்டர் அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் சிவ்சங்கர் மேனன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினாரல்லவா…

வெளியுறவுத் துறை செயலராக இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய மேனன் இலங்கை விடயங்களை கையாண்டவர்..

பழுத்த இராஜதந்திரி.போர்க் காலத்தில் மஹிந்த அரசுடன் மிகவும் ஒத்துழைத்து செயற்பட்டவர்.

அப்படி கடந்த காலங்களில் அளித்த ஒத்துழைப்புக்காக அவருக்கு நேற்றைய சந்திப்பில் நன்றி தெரிவித்தார் மஹிந்த..

அப்போது அவர் அரசியல் பேச்சுக்களுடன் முக்கிய விடயம் ஒன்றையும் குறிப்பிட்டார் மேனன்..

“ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ( ராஜபக்ச )
தோற்றாலும் மீண்டும் இலங்கை அரசியலில் எழும்பி வந்துவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்..” என்று கூறினார் மேனன்..

அதனைக் கேட்டு வியந்த மஹிந்த “ நன்றி.. இதே கருத்தை இந்து பத்திரிகையின் ராம் கூட என்னை சந்தித்தபோது கூறியிருக்கிறார்..” என்று அதற்கு பதிலளித்தார் மஹிந்த..

“ ஆம்.. ராம் என்னிடமும் இதனை தெரிவித்துள்ளார்” என்று மஹிந்தவுக்கு பதில் வழங்கினார் மேனன்..

இந்த சந்திப்பின் பின்னர் தனது நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த – இந்திய இராஜதந்திரிகள் இலங்கை குறித்து கொண்டுள்ள பார்வையை வியந்ததாக தகவல்..