இலங்கை

மஹிந்த – நிரூபமா ராவ் சந்திப்பு – முக்கிய பல அரசியல் விடயங்கள் பற்றி பேச்சு !

 

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று காலை கொழும்பில் சந்தித்து பேசியுள்ளார்.

இரு நாட்டு அரசியல் மற்றும் இதர பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிகிறது. குறிப்பாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நிரூபமா ராவ் வினவியதாகவும் அந்த விடயம் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லையென மஹிந்த ராஜபக்ச இதன்போது கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

சார்க் பிராந்தியத்தில் செயற்படும் வகையில் கலை -கலாசார அமைப்பொன்றை நிறுவியிருக்கும் நிரூபமா ராவ் அது தொடர்பில் மஹிந்தவிடம் தெளிவுபடுத்தினாரென்றும் அறியமுடிந்தது. பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் – திருமதி கதிர்காமர் – நிரூபமாவின் கணவர் சுதாகர் ராவ் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.