Breaking News

மஹிந்த தலைவர் – மைத்ரி தவிசாளர் – தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பம் !

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தவிசாளராகவும் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி பதிவுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த முன்னணி தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி செயலாளராக பசில் ராஜபக்ச ,பிரதித் தவிசாளர் தினேஷ் குணவர்தன ,பிரதிச் செயலாளர் மஹிந்த அமரவீர, முன்னணியின் தேசிய அமைப்பாளர்களாக தயாசிறி ஜயசேகர,விமல் வீரவன்ச ,உப செயலாளர் உதய கம்மன்பில ,உப தலைவர்களாக திஸ்ஸ விதாரண ,வாசுதேவ நாணயக்கார ,டியூ குணசேகர ஆகியோர் நியமிக்கபப்ட்டுள்ளனர்.