Breaking News

மஹிந்த தரப்புடன் இணைந்தார் நுவரெலியா சதாசிவம் !

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டது.

கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் சதாசிவம் ,எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.