இலங்கை

மஹிந்தவை புதுவருடத்தில் வாழ்த்திய மைத்ரி !

“சுப அழுத் அவுருத்தக் பிரார்த்தனா கரணவா விபக்ச நாயக்கத்துமா.. ” –  ” புதுவருட வாழ்த்துக்கள் எதிர்க்கட்சித்தலைவரே ..”
இப்படி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி  புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தங்காலையில் தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச – ஜனாதிபதியின் இந்த வாழ்த்தை ஏற்று நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் அவருடன் அளவளாவியதாக தகவல் .
புதுவருட விடுமுறைகளுக்குப் பின்னர் இருவரும் கொழும்பில் சந்தித்துப் பேசுவதென்றும் இந்த தொலைபேசி உரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.