இலங்கை

மஹிந்தவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டெப்ளிட்ஸ் அம்மையார் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விஜேராம இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்தினை ஒழிப்பது தொடர்பில் செயற்படும் அமெரிக்கா , இலங்கைக்கும் அதற்காக உதவிகளை செய்யுமென அமெரிக்கத் தூதுவர் இந்த சந்திப்பில் தெரிவித்தார்.