உஷ்... இது இரகசியம் !

மஹிந்தவிடம் மோடி சொன்ன இரகசியம் !

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பை எடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச .தேர்தல் வெற்றிக்காக மோடியை வாழ்த்திய மஹிந்த எதிர்காலத்தில் இருநாட்டு உறவுகளும் பலமடைய ஒன்றுபட்டு செயற்படுவோமெனத் தெரிவித்தார்.

வாழ்த்துக்கு நன்றி கூறிய மோடி… ” மிஸ்டர் ராஜபக்சே… ஐ எம் கொய்ங் ரு ரெல் யு எ சீக்ரெட்..” என்றாராம்.அதைக் கேட்ட மஹிந்த ” யெஸ் எக்ஸெலென்சி ” என்று கூறி அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாராம்.

” உங்களுக்கு முன்னதாகவே உங்கள் மகன் நாமல் எனக்கு வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.அவருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் சொன்னதாக சொல்லுங்கள்.விரைவில் சந்திப்போம் ” என்றாராம் மோடி .