Breaking News

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 47 கத்திகள் மீட்பு : ஒருவர் கைது

 

(நோட்டன்பிரிஜ் நிருபர் – எம்.கிருஸ்ணா )

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 47 கத்திகள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினால் மஸ்கெலியா நகரில் பொலிஸாரும்
இரானுவத்தினரும் இனைந்து (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த
பள்ளிவாசலில் இந்த 47 கத்திகள் கைப்பற்றப்பட்டன .

குறித்த பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையிலயே இந்த குறித்த கத்திகள் இருந்ததுடன் கத்திகள் இந்த
பள்ளிவாசலுக்கு எவ்வாறு வந்தது என தெரியாதென்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்
மஸ்கெலியா பொலிஸாருக்கு வாக்குமுலம் வழங்கியுள்ளார்.

கைதுசெய்யபட்ட சந்தேக நபர் நாளை .ஞாயிற்றுகிழமை அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான்
முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்