Breaking News

மஸ்கெலியாவில் சாதிக்கலவரம் – இளைஞனுக்கு வாள்வெட்டு !

மஸ்கெலியா குமரி தோட்டத்தில் திருவிழா முடிந்து இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இப்போது சாதிக்கலவரமாக உருவெடுத்துள்ளதாக  பொலிஸார் கூறுகின்றனர்.

நேற்று இரவு முதல் விடிய விடிய நடந்த மோதல்களின் பின்னர் கமல் என்ற இளைஞர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.. வெளியூர்களில் இருந்தும் வந்த கோஷ்டி கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்று அங்கு சென்ற பொலிஸாரின் ஜீப் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் நடைபெறுகின்றன