விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட இலங்கை – ஸ்கொட்லாந்து கிரிக்கட் போட்டி

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தப்போட்டி இடம்பெறவிருந்த எடின்பேர்க்கில் கடும் மழை பெய்தநிலையில், போட்டியை 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் மழை தொடர்ச்சியாக பெய்ததால் எந்த ஒரு பந்தும் வீசப்படாமல் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் அடுத்தப் போட்டி 21ம் திகதி நடைபெறவுள்ளது.