இலங்கை

மல்வத்து – அஸ்கிரிய பீடங்களை விட குறைந்தவர்களா நாங்கள்? – ஜனாதிபதியிடம் கேள்வி

கண்டியில் நடைபெற்ற திரிபிடக புனித நிகழ்வில் மாநாயக்க தேரர்களின் ஆசன வரிசையை ஒழுங்கு செய்தவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ லங்கா ராமஞ்ய பீடம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

தேரர்மார்களுக்கு ஆசன ஒழுங்குகளை செய்வது தொடர்பில் பௌத்த சாசனத்தில் தெளிவாக உள்ளதாகவும் அவற்றை மதிக்காமல் செய்த வேலையால் அது அனைவரின் நகைப்புக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமஞ்ய பீடம் , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கருக்கு உயரமாக ஆசனங்களை அமைத்தமையே அதற்கான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமரபுர மற்றும் ராமஞ்ய பீடங்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அந்த கடிதத்தில் மேலும் சொல்லப்பட்டுள்ளது