இலங்கை

”மலையக மக்கள் தமது உரிமைகளுக்காக எவரிடமும் கெஞ்சத் தேவையில்லை” – ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் !

 

மலையக பெருந்தோட்ட மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எவரிடமும் சென்று கையேந்தக் கூடாது. அவர்களின் உரிமைகளை மக்கள் பிரதிநிதிகள் பெற்று கொடுக்க முன்வர வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம். கே .சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிவாஜிலிங்கம் கூறியதாவது ,

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ஒன்று கூறுகிறார் சஜித் பிரேமேதாச வேறொன்று கூறுகிறார். தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் கல்வி மருத்துவம் போன்ற விடயங்களில்இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஸ்தாபக
தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான். அவர் எனக்கு நல்லபரிட்சயமானவர் வடகிழக்கில் கடந்த மூப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரனமாகஅங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வந்தார்கள் ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து பிறகு அங்குள்ள மாணவர்கள் கல்விதுறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். மலையகத்தில் கல்வியின் வளர்ச்சியில் முன்னேற்ற தன்மை குறைந்த அளவே காணப்பட்டுவருகிறது அதற்கு மலையக பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

மலையகத்தில் வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு
வந்தாலும் முலுமையான அபிவிருத்திகள் எதுவுமே மலையக மக்களுக்கு
கிடைக்கபெறவில்லை. இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு மாத்திரம்
பிரச்சினை இருக்கிறதென நாம் கூற முடியாது எமது நாட்டில் வாழுகின்ற
அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது
அதற்கு நாம் ஒரு தீர்வினை காண வேண்டும் .முதியோர்களுக்கு சமுர்த்தி
கொடுப்பனவு வழங்கப்படுகிறது அதில் மூவாயிரம் தொடக்கம் ஜந்தாயிரம் ருபா
போன்ற தொகைகளை வவழங்குகின்றனர். இந்த தொகை அவர்களுக்கு போதுமானது அல்ல
சமுர்தி கொடுப்பனவை பெறும் முதியோருக்கு குறைந்தபட்சம் தலா 30ஆயிரம் ருபா
வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேற்கொள்ள
முடியும்.

இந்த நாட்டில் நூற்றுக்கு எழுபத்தி ஜந்து சதவீதம் சிங்கள மக்கள்
வாழுகின்றனர். அதில் வெறுமனே இருபத்தி ஜந்து சதவீதம் மாத்திரம் தமிழ்
மற்றும் முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர் அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு
உரிய முறையில் கிடைப்பதில்லை முதியோர்கள் பேருந்திலோ அல்லது புகையிரத
வண்டியிலே பயணம் செல்லுகின்ற போது அவர்களுக்கான இலவச அனுமதி சீட்டுகள்
வழங்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

இலங்கை நாட்டுக்கு இலவச கல்வி திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் சி. டபிள்யு .டபிள்யு
.கன்னங்கரா. இது போன்ற ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு கூட
கிடைக்கவில்லை. எனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபானத்தில்சுயாட்சி
பிராந்தியம் ஒன்றை அமைக் ப்பட வேண்டுமென நான் வெளியிட்டுள்ளேன் மத்திய
மாகணம். ஊவா மாகாணம். சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்களில் சுமார் 35 சதவீத
தமிழ் மக்கள் வாழுகின்றார்கள் இந்த மக்களுக்கு சமமான உரிமைகள் தேவை.

என்றார் சிவாஜிலிங்கம்