இலங்கை

மலையகத்தில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் தொண்டா !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் பியுமான ஆறுமுகம் தொண்டமான்.

தேர்தலையொட்டிய பிரசாரங்கள் கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட கிர்ஸ்லஸ் பாம், லொக்கில், ஸ்மோல்ட்றேட்டன், ஸ்டோனிகிளிப், பத்தனை போகாவத்தை, ஆகிய இடங்களில் இடம்பெற்றன.