Breaking News

மலையகத்தில் குளவிகள் பிரச்சினையை அமைச்சரவை ஆராய்வு – உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் !

 

மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் குளவிக் கூடுகள் கலைந்து மக்களை கொட்டுவதால் உயிரிழப்புகள் வரை ஏற்படுவது குறித்து நேற்றுக் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைச்சரவை விரிவாக ஆராய்ந்தது .

இந்த பிரச்சினை குறித்து முன்னதாக ” தமிழன் ” செய்திகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த விடயத்தை அமைச்சரவையில் பிரஸ்தாபித்த பிரதமர் மஹிந்த ,இதற்கு உடனடி தீர்வை வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

குளவித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை கேட்டுக்கொண்ட பிரதமர், மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்து இந்த நிலைமைகளை பார்வையிடுமாறு அவருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் குளவித் தாக்குதல் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்படுமென பிரதமர் பிரதமர் மஹிந்த நேற்றிரவு ‘தமிழன்’ செய்திகளிடம் குறிப்பிட்டார்.