இலங்கை

மலையகத்தில் கடும் சோதனை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மலையகத்தின் பல பகுதிகளில் சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. அட்டன் நகருக்கு வரும் பஸ்களும் தனியார் வாகனங்ளும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இன்று அதிகாலை முதல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இனைந்து, அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் , பஸ்களிலும் ஏனைய தனியார் வாகனங்களிலும் பயணித்தோரை இறக்கி ஆள் அடையாள அட்டை, மற்றும் பொதிகள் என்பனவற்றை பரிசேதனைக்குட்படுத்தினர்.

( நோட்டன்பிரிட்ஜ் நிருபர் – எம் கிருஸ்ணா )