இலங்கை

” மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம்” – கொட்டகலையில் கோட்டா உறுதி !

 

 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவும் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுவதுடன் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தபடுமென ஸ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை
விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார
கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை
தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

மலையகத்தின் அபிவிருத்திகள் கடந்த நான்கரை வருடகாலமாக
மந்தகதியில் காணப்பட்டு வருகிறது ஆகவே எமது அரசாங்கம் உருவாகியபிறகு
மலையகததில் உள்ள வீதிகள் புனரமைப்பு மற்றும் மலையகத்திற்கான பல்கலைகழகம்
அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மலையக மக்களின்
பிரச்சினை தொடர்பில் நாம் நன்கு அறிவோம்.

மலையகத்தில் உள்ள மாணவர்கள் இன்று பல்கலைக்கழகம் செல்லுவது அதிகரித்து
விட்டது ஆகையால் நாங்கள் மலையகத்தில் புதிய பல்கலைகழகம் அமைக்க நடவடிக்கை
எடுத்துள்ளோம் மலையகத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அதிகரிக்க
நடவடிக்கை முன்னெடுக்கப்படும் .கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களில்
மலையக மாணவர்கள் தேர்ச்சிபெற்ற விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள்
நியமிக்கபடுவார்கள்.பெருந்தோட்ட தொழிலாளர்களால் பறிக்கபடும் தேயிலைக்கு சிறந்த
விலையினை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். சிலர் மலையக
பகுதிக்கு வந்து வாக்குருதி வழங்குவார்கள் வீடுகள் அமைத்து தருவதாக
மலையக மக்களுக்கு இதுவரையிலும் முறையான வீடமைப்பு திட்டம் பெற்று
கொடுக்கப்படவில்லை.இந்த கொட்டகலை நகரத்தை பாரிய
அளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன் இன்று முழு நாட்டில் உள்ள
மக்களும் முறையான பாதுகாப்பின்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் .இந்த
அரசாங்கத்தின் முலமாக சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்களும் உள்ளார்கள்
பெறாதவர்களும் உள்ளார்கள். ஆனால் எமது அரசாங்கத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் சமுர்த்தி
கொடுப்பனவு வழங்குவோம். நாம் இன்று மக்கள் மத்தியில் வழங்கும்
அனைத்து வாக்குறுதிகளும் எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர்
நிறைவேற்றப்படும். – என்றார்.

பொகவந்தலாவ நிருபர்