விளையாட்டு

மற்றுமொரு சாதனையை படைத்தார் ஸ்மித்

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 7,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

பாகிஸ்hனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார். 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, ஸ்மித் 7013 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், இந்திய அணியின் முன்னாள் விரேந்தர் ஷேவாக், 79 போட்டிகளிலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வொலி ஹமோன்ட் 80 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கார 83 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

மேலும், இந்திய அணியின் மற்றுமொரு முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 85 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.