உலகம்

மர்ம நோயால் முஷாரப் பாதிப்பு

 

பாகிஸ்தானை விட்டு வெளியேறி டுபாயில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் கடந்த 2016–ம் ஆண்டு ஒக்டோபரில் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ‘அமைலாடோசிஸ்’ என்ற அபூர்வ நோய் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். மருத்துவ சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் டுபாயில் உள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.