இலங்கை

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு

நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறித்திருந்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு நேற்று (26) இதனை மக்களுக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.