உலகம்

மருத்துவர் உயிரிழப்பில் மர்மம்

அமெரிக்க நியூஜெர்சி மருத்துவமனையில் இந்திய மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியா கர்நாடக மாநில ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகாம் மணிதீப் (நியுஜெர்ஸி, சென்.பீட்டர்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பணியாற்றிய மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில், நந்திகாம் மணிதீப் இறந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.

இவரது மரணம் குறித்து, சிந்தனூர் தாலுகா காந்திநகர் கிராமத்திலுள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மணிதீப் நியூஜெர்சியிலுள்ள தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். வியாழக்கிழமை காலையில் அவர் பணிக்கு சென்ற பிறகு வீடு திரும்பவேயில்லை.

நந்திகாம் மணிதீப் மர்ம மரணம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.