உலகம்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்குமனித உடலில் உள்ள உயிரணுக்கள் எவ்வாறு பிராணவாயுவை உணர்கின்றன என்பது குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு அது குறித்த முடிவுகளை வெளிப்படுத்திய மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துறைக்கான இந்த வருடத்திற்கான நோபல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த சேர் பீற்றர் ஜே ரட்கிளிப் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம்  ஜே கேலின், கிரெக் எல் செமன்சா ஆகிய மூவருமே நோபல் விருதாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்சிசன் எனப்படும் பிராணவாயுவின் அடிப்படை முக்கியத்துவம் பல நூற்றாண்டுகளாக புரிந்துகொள்ளப்பட்டாலும் பிராணவாயுவின் அளவு மாறுபடும்போது மனித உடலிலின் உயிரணுக்கள் எவ்வாறு தங்களை தகவமைத்துக்கொள்கின்றன என்பது  குறித்து நீண்டகாலமாக தெரியாமல் இருந்த நிலையில் குறித்த 3 விஞ்ஞானிகளின் ஆய்வு இதற்கு தீர்வு கண்டுள்ளது.

குறிப்பாக இரத்தச் சோகை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளுக்கு இவர்களின் கண்டுபிடிப்பு வழி செய்துள்ளதால், இருவர்களுக்கு விருது பரிந்துரைக்கபட்டதாக நோபல் குழு அறிவித்துள்ளது.