இலங்கை

மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார் சஹ்ரானின் சகோதரி !

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரானின் சகோதரி மதனியா , மரபணு பரிசோதனைக்காக  கொழும்பு அழைத்து வரப்படவுள்ளார்.
நாளை முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரியிடம் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் .
முன்னதாக  மதனியாவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க ,மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று உத்தரவிட்டார் . அதன்படி மட்டக்களப்பு சிறையில் இருந்து மதனியா கொழும்புக்கு அழைத்துவரப்படுகிறார்.