Breaking News

மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

புதுவருட பிறப்பைக் கொண்டாட மகனின் வீட்டுக்கு வந்த தந்தையொருவர் பலா மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நாகொட உனன்விட்டிய , லிட்டில்வத்த பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்லையா கதிரமலை என்பவரே உயிரிழந்தவராவார்.

பலாக்காய் பறிக்க மரத்தில் ஏறிய அவர் தவறி வீழ்ந்ததும் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

நாகொட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.