Breaking News

மரண தண்டனை தீர்மானத்தை கைவிடுங்கள் – இலங்கையிடம் பிரிட்டன் கோரிக்கை !

 

மரண தண்டனை மீண்டும் அமுலாக்கம் என்ற இலங்கையின் அறிக்கைகளில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலகம் , மரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதை கொள்கை அடிப்படையில் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,

ஆறு மாதங்களுக்கு முன்பு ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனையைப் பயன்படுத்துவது தொடர்பான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.

இது இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டையும், சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் உள்ள அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல மரண தண்டனையை அமல்படுத்துவது – பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட அமலாக்கப் பிரச்சினைகளில் இங்கிலாந்து இலங்கையுடன் ஒத்துழைப்பதை தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமாக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் நாங்கள் எங்கள் கவலைகளை எழுப்பியுள்ளோம். மரண தண்டனையின் மீதான தடையை தொடருமாறு இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றோம்.

– என்று கூறப்பட்டுள்ளது.