Breaking News

மரணதண்டனை யோசனைக்கு ஆதரவில்லை – மைத்ரியின் திட்டத்தை கடாசினார் ரணில் !

 

மரணதண்டனையை அமுல்படுத்தும் யோசனையை எதிர்ப்பதாக மொனராகலையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

மரணதண்டனையை ஆதரிக்காதிருக்க எமது கட்சி கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. மஹிந்த தலைமையிலான எதிர்க்கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜே வி பி என்பனவும் எதிர்க்கின்றன.இதனை பாராளுமன்றம் , அமைச்சரவையில் விவாதிக்க வேண்டும்.அதைவிடுத்து உயிர்பறிப்பு வேலைகளை உடனே செய்ய முடியாது.

மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஜே.ஆர் ஜயவர்தன அப்போதைய ஜனாதிபதியால் இந்த முடிவு முதலில் எடுக்கப்பட்டது . பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க , மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்த முடிவில் இருந்தனர்.

மரணதண்டனை திட்டத்தை உலகில் இடைநிறுத்தும் டிசம்பர் 17, 2018 திகதிய ஐ.நா. தீர்மானத்தை இலங்கை ஆதரித்தது. அப்போது மைத்ரிபால ஜனாதிபதியாக இருந்தார்.

என்றும் சொன்னார் ரணில் .