இலங்கை

மரணதண்டனை பெற்ற இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்டேன் – இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் !

இலங்கையில் மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை கூட விடுதலை செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் .

தமிழக இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் , மீனவர்கள் குறித்து தனது ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக கூறினார்.

“ சர்வதேச கடல் எல்லையை மீறி சென்று மீன்பிடித்து இலங்கையில் கைதான சுமார் 1900 மீனவர்களை இதுவரை எனது ஆட்சியில் விடுவித்துள்ளேன். மரணதண்டனை பெற்ற மீனவரை கூட விடுவித்துள்ளேன்.இதெல்லாம் பிராந்தியத்துள் நாங்கள் வைத்துள்ள உறவாலும் எமது இராஜதந்திர அணுகுமுறையாலும் சாத்தியமானது. மீனவர்களை காப்பது நாங்கள் தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்காது..”

என்றும் குறிப்பிட்டார் மோடி