Uncategorized

மரணதண்டனை தொடர்பான சஜித்தின் கருத்தால் புதிய சர்ச்சை – மங்கள -சம்பிக்க எதிர்ப்பு !

 

மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் புதிய சர்ச்சையொன்று எழுந்துள்ளது.

கட்டானையில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ – பயங்கரவாதிகள் ,போதைப்பொருள் வர்த்தகர்கள் ,கொலைகாரர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுமென அறிவித்திருந்தார்.

சஜித்தின் இந்த கூற்று தொடர்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர ,சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே மரணதண்டனை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாலும் பௌத்த மக்கள் மத்தியில் அது விசனத்தை உருவாக்கியுள்ளதாலும் அதனைப் பற்றிப் பேசுவது தேவையற்ற செயலென சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இனி தேர்தல் மேடைகளில் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து சஜித் பகிரங்க கருத்துக்களை வெளியிடக் கூடாதென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிந்தது.