Breaking News

“மரணதண்டனைக்கு எதிரான செயற்பாடுகளில் போதைப்பொருள் வர்த்தகர்கள்” – மைத்ரி குற்றச்சாட்டு

 

“போதைப்பொருளை ஒழிக்க மரணதண்டனையை அமுல்படுத்த முயற்சிக்கும்போது வரும் எதிர்ப்புக்களை பார்க்கையில் அவற்றின் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.”

மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜனாதிபதி மைத்ரிபால இவ்வாறு குறிப்பிட்டார்.

“எனது ஆட்சிக்காலத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நான் கையொப்பமிடமாட்டேன். இலங்கையை கேந்திர தங்களது நிலையமாக மாற்ற சில நாடுகள் முயல்கின்றன.அந்த நாடுகளின் நோக்கங்கள் நிறைவேறாது. நாட்டை பாதுகாக்கும் எனது நோக்கில் இருந்து நான் மீறமாட்டேன்.

இன்று போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க நான் முயற்சிகளை எடுக்கும்போது அதற்கு தடைவிதிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர்.இப்படி செல்லும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , முக்கியஸ்தர்கள் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகர்களே உள்ளனர்.யார் என்ன முகமூடியை போட்டு வந்தாலும் அவர்களின் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகர்களே உள்ளனர். இன்று சமூக ஊடகங்களில் என்னை விமர்சிப்போர் முன்னைய ஜனாதிபதிமாரை இப்படி விமரிசித்திருந்தால் உங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.”

என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி