உலகம்

மன்ஹாட்டான் ஸ்கைஸ்க்ரெப்பரில் மோதிய உலங்குவிமானம்

நியுயோர்க்கில் உள்ள மன்ஹாட்டான் நகரின் உயர்ந்த கட்டிடமான ஸ்கைஸ்க்ரெப்பரில் உலங்கு விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குறித்த உலங்கு விமானத்தின் விமானி உயிரிழந்தார்.

விபத்தை அடுத்து கட்டிடத்தின் கூரையில் தீப்பரவல் ஏற்பட்ட போது, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து நகரில் பரபரப்பான நிலைமை பதிவானது.

செப்டம்பர் 11 தாக்குதல் போல இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவியதாக, நியுயோர்க் ஆளுனர் தெரிவித்துள்ளார்.