உலகம்

மன்னிப்புக் கோரினார் ஹொங்கொங் அரச தலைவர்ஹொங்கொங் தலைநகரில் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் பள்ளிவாசசல் ஒன்றின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமைக்கு, அந்நாட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெரி லாம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜப்பானில் இடம்பெறவுள்ள, பேரரசர்  நருஹிட்டோவின் மகுடம் சூட்டும் விழாவில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக  லாம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதோடு,  நீல நிற சாயத்தினையும் ஜெட் விமானங்கள் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தெளித்தனர்.

ஹொங்கிங்கின், மிக முக்கியமான இஸ்லாமிய வழிபாட்டுத் தலமான கவுலூன் பள்ளிவாசலின், முன் வாயிலையும் படிகளையும் பொலிஸார் நனைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை லாம் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டதோடு, இஸ்லாமிய தலைவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எவவாறெனினும், பள்ளிவாசல் மீது தற்செயலாகவே நீர் தெளிக்கப்பட்டதாகவும், தாம் மத சுதந்திரத்தை மதிப்பதோடு, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க பாடுபடுபவர்கள் தாமே எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.