Breaking News

மன்னாரில் கனியவள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கனிய வள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் இன்று (28) காலை 11 மணியளவில் குறித்த கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கண்டன போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.