உலகம்

மனித மூளையையும் கணனியையும் இணைக்கும் எலோன் மஸ்க்கின் முயற்சி

மனித மூளையை கணினி இன்டர்பேசுடன் இணைப்பதற்கான வழிகளை ஆராய எலோன் மஸ்க் அமைத்த நியூரோலிங்க் என்ற நிறுவனம் மனித சோதனைக்கு தயாராகியுள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்துள்ள கருவியை மனிதர்களுக்கு பொருத்தி சோதனை செய்வதற்கு, அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களுக்கு விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே இது குரங்களுக்கு பொருத்தப்பட்டு சோதனை நடத்தி, வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கின் கூற்றுப்படி, கடுமையான நரம்பியல் நிலைமைகள் உள்ள நோயாளிகளுக்கு இதனை பயன்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சாதனம் மனித முடியை விட மெல்லிய 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் கொண்டிருக்கும்.

அவற்றில் ஒவ்வொன்றும் 1,000 நீரோன்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.