உலகம்

மத நிகழ்வொன்றுக்காக ஒன்று கூடியவர்கள் கூடாரம் வீழ்ந்து உயிரிழப்பு

 

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மத நிகழ்வொன்றுக்காக கூடாரம் ஒன்றில் அவர்கள் தங்கி இருந்தநிலையில், காற்று மற்றும் மழையால் கூடாரம் அவர்கள் மீது கழன்று வீழ்ந்துள்ளது.

இதனை அடுத்து மின்சாரம் தாக்கி அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் பாரிய இரும்பு தூண்கள் விழுந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் போது அங்கு 300 பேர் கூடியிருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது

இந்த சரிவு ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடந்தது.