இலங்கை

மத்திய மாகாண மதுபானசாலைகள் மூடப்பட்டன

ஆளுநரின் கோரிக்கைக்கமைய மத்திய மாகாண மதுபானசாலைகள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டன.

ஹட்டன் மதுவரி திணைக்களத்திற்குட்பட்ட , ஹட்டன் ,பொகவந்தலாவ , நோர்வுட் , டிக்கோயா மஸ்கெலியா , தலவாக்கலை , நுவரெலியா ,அக்கரபத்தனை ஆகிய பகுதிகளின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டதாக ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

இன்று காலை 09 மணிக்கு திறக்கப்பட்ட மதுபானசாலைகள் அனைத்தும் பிற்பகல் இரண்டு மணி அளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஒரு வாரம் வரை மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

 

( நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் – கிருஷ்ணா )