உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலதிக படையினர்

ஈரானுடனான பதற்றத்தின் மத்தியில், 1000 மேலதிக படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா தயாராகியுள்ளதாக அமெரிக்க பதில் பாதுகாப்பு செயலாளர் பெற்றிக் சனாஹன் அறிவித்துள்ளார்.

ஈரானிய படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓமான் குடாவில் வைத்து இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்ட விடயத்தில் ஈரானிய படையினர் தொடர்புபட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இதுதொடர்பான புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்கா ஈரானுடன் யுத்தத்தைக் கோரவில்லை என்றும், பிராந்திய பாதுகாப்புக்காக அங்கு படையினர் அனுப்பப்படுவதாகவும் பெற்றிக் சனஹான் தெரிவித்துள்ளார்.