உலகம்

மத்திய கிழக்கிற்கு யுத்த தளபாடங்களை அனுப்பும் அமெரிக்கா

ஈரான உடனான பதட்ட நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா தமது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் யுத்தக் கப்பல் ஒன்றை மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
நீரிலும் நிலத்திலும் இருந்து தாக்குதல் நடத்தக்கூடிய யூஎஸ்எஸ் ஆர்லிங்டன் இயந்திரம், தாக்குதல் விமானம் ஆகியனவும் இந்த கப்பலோடு இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கட்டாரில் உள்ள அமெரிக்க தளத்துக்கு யு.எஸ் – பி-52 குண்டுதாக்குதல் விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.