மதுஷ் இரு வாரங்களுள் இலங்கை கொண்டுவரப்படலாம் – நீதிமன்றத்தில் அறிவிப்பு
டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் இரு வாரங்களுள் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளாரென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கொலைச்சதி விவகாரம் குறித்தான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது ஆஜராகிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.