இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸார் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடம்பெற்றதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவிக்கிறது. களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் அடங்குகின்றனர் .. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் இடம்பெறும் என்று பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.