இலங்கை

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீடொன்றின் பின்புறத்தில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறத்திலுள்ள சுவருக்கு அடித்தளம் தோண்டும்போதே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்து குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.