இலங்கை

மண்டைதீவு கடலில் கொல்லப்பட்ட மீனவர் நினைவு தினம் அனுஷ்டிப்பு !

-யாழ் நிருபர் –

யாழ். மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது..

குறித்த நினைவு தின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ். மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.