இலங்கை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றார் ஜனாதிபதி மைத்ரி !

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (08) பிற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.