Breaking News

மட்டக்களப்பு சிறை வாசலில் வைத்து கைதானார் வெல்லம்பிட்டிய திலான் !

புதையல் தோண்டிய விவகாரம் ஒன்றில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த வெல்லம்பிட்டிய திலான் சத்துரங்க என்பவர் பிணையில் விடுதலையாகி வெளியே வரும்போது சிறை வாசலில் வைத்து சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு சிறை வாசலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன்  கைது செய்த சி ஐ டி அவரை கொழும்புக்கு கொண்டு வருகின்றது.
பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக  கருதப்பட்ட இவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கொலை தொடர்பாக சி.ஐ.டியினரால் தேடப்பட்டு வந்தார் என சொல்லப்படுகிறது.
இவர் முன்னர் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது