Breaking News

மடுல்சீமையில் நீரில் மூழ்கி மூவர் பலி !

 

மடுல்சீமை , கெரண்டிஎல்ல பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 38 வயதுடைய தந்தை , 13 வயதுடைய அவரது மகள் , 12 வயதுடைய உறவு முறை சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.