இலங்கை

மங்களவுக்கு மாத்தறையிலும் தடை !

பௌத்த விடயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவருவதால் அமைச்சர் மங்கள சமரவீரவை மாத்தறை மாவட்டத்தின் எந்த விகாரைக்கும் அழைப்பதில்லையென்றும் -அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை பகிஷ்கரிக்கவும் மாத்தறை பௌத்தசாசன சங்கம் நேற்று தீர்மானித்துள்ளது.

நேற்று அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்திய பின்னர் மாத்தறை மகாபோதியின் முன்பாக இதற்கான உறுதிமொழியையும் பிக்குமார் ஒன்றுகூடி எடுத்தனர்.

இதன்படி அமைச்சரை இனி மாத்தறை மாவட்ட விகாரைகளின் எந்த நிகழ்வுகளுக்கும் அழைப்பதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பஹா மாவட்டத்திலும் அமைச்சருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.